விக்ரமின் ரீல் மகள் சாராவா இது? ரன்வீர் சிங்குக்கு ஜோடி.. வெளிவந்த 'துரந்தர்' படத்தின் டிரைலர்..
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் துரந்தர். இப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

மேலும், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் ரீல் மகளாக, குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த சாரா அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் இதுவும் ஆகும். இந்த நிலையில், துரந்தர் படத்தின் டிரைலர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதில் பல காட்சிகள் ரத்தம் தெறிக்க தெறிக்க எடுத்துள்ளனர்.

மேலும், அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்க்கை க்ளிக் செய்து துரந்தர் படத்தின் டிரைலரை பாருங்க