இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது
சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஹிந்தியில் வசூலை வாரிக்குவித்து வருகிறது துரந்தர் படம். ரன்வீர் சிங் நடித்து இருக்கும் இந்த படம் 3 வாரங்களில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இதில் 600 கோடிக்கும் மேல் இந்தியாவில் மட்டுமே வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் 1000 கோடியை தொட இருக்கும் துரந்தர் இந்த வருடத்தின் நம்பர் 1 படம் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்களால் புகழப்பட்டு வருகிறது.
மேலும் துரந்தர் 2ம் பாகம் வரும் 2026 மார்ச் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி உரிமை
இந்நிலையில் துரந்தர் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட தொகைக்கு வாங்கி இருக்கிறது.
ரூ.285 கோடிக்கு ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருக்கிறதாம். இது இந்தியாவில் ஒரு படத்திற்கு கிடைத்த அதிகபட்ச விலை என சொல்லப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் முந்தைய சாதனையை துரந்தர் படம் தற்போது முறியடித்து இருக்கிறது.
புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமை 270 - 275 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது. அந்த சாதனையை துரந்தர் தற்போது முந்தி இருக்கிறது.
