துரந்தர் 2 திரை விமர்சனம்

Report

பாலிவுட் சினிமாவையே காபபாற்றி 1000+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட வெற்றியை பெற்ற துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் இன்று பிரமாண்டமாக வெளிவர, படம் எப்படி பார்ப்போம்.

துரந்தர் 2 திரை விமர்சனம் | Dhurandhar The Revenge Movie Review

கதைக்களம்

முதல் பாகம் ரெக்மான் டாகிட்-யை ரன்வீர் கொன்றதிலிருந்தே படம் தொடங்குகிறது. ஆனால், இதில் ரன்வீர் இப்படி இந்த ஆப்ரேஷனுக்குள் வந்தார் என்ற ப்ளாஷ்பேக் வருகிறது.

ஒரு நிகத்தகறாரு ஒன்றில் தன் அப்பாவை கொன்று, குடும்ப பெண்களையும் கொடுமை படுத்தியவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்லும் ரன்வீரை ஒரு சிலர் கடத்துகின்றனர்.

துரந்தர் 2 திரை விமர்சனம் | Dhurandhar The Revenge Movie Review

பிறகு தான் தெரிகிறது அவர்கள் இந்திய உளவுத்துறை சார்ந்தவர்கள் என்பது, பிறகு எல்லோருக்கும் தெரிந்தது தான், ரன்வீரை பாகிஸ்தானுக்குள் அனுப்பி ஒரு ஆப்ரேஷனை நடத்த திட்டமிடுகின்றனர்.

அதன்படி ரன்வீர் தன் முதல் பலியாக ரெக்மான் டாகிட்டை முடிக்க, அதை தொடர்ந்து இந்த படத்தில் பலூச், லயாரி பகுதிக்கு ரன்வீர் அரசன் போல் ஆக, அதன் பிறகு அவர் சத்தமே இல்லாமல் பல தலைகளை எடுக்கும் தேச போராட்டமே இந்த துரந்தர் 2 மீதிக்கதை.

துரந்தர் 2 திரை விமர்சனம் | Dhurandhar The Revenge Movie Review

படத்தை பற்றிய அலசல்

முதலில் 16 மாதத்தில் எப்படி இப்படியொரு கதையை யோசித்து, அதை திறம்பட இத்தனை நடிகர்களை வைத்து இயக்குனர் ஆதித்யா எடுத்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம், முதல் பூங்கொத்து அவருக்கு தான் கொடுக்க வேண்டும்.

அதே போல் முதல் பாகத்தில் அடக்கி வாசித்த ரன்வீருக்கு இதில் தான் நடிப்பிற்கு நல்ல தீனி, அவரும் சிறப்பாக செய்துள்ளார், இவர்களை தொடர்ந்து படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர்.

துரந்தர் 2 திரை விமர்சனம் | Dhurandhar The Revenge Movie Review

யூத் திரை விமர்சனம்

யூத் திரை விமர்சனம்

குறிப்பாக மாதவன் கதாபாத்திரம் அல்பாஸ் அள்ளுகிறது. இப்படம் ஆரம்பமே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது, ஆனால், அரை மணி நேரம் தாண்டி படம் மிக மெதுவாகவே நகர்கிறது, கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் இடத்தில் யாரும் எதிர்பார்க்காத சூப்பர் இடைவேளை வைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

பிறகு இரண்டாம் பாதி ஆங்காங்கே படம் வேகமெடுத்தாலும், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இதில் மிகவும் மிஸ்ஸிங் தான், வழக்கம் போல் கிளைமேக்ஸ் செம ஸ்கோர் செய்துவிட்டனர்.

துரந்தர் 2 திரை விமர்சனம் | Dhurandhar The Revenge Movie Review

படத்தில் டிமானிடேஷன் பற்றியெல்லாம் காட்டியுள்ளார்கள், இதெல்லாம் நன்றாக கொஞ்சம் ஒரு தரப்பை திருப்திப்படுத்தவே எடுத்தது போல் இருந்தது, தாவூத் சம்மந்தப்பட்ட காட்சிகள் சூப்பர். டெக்னிக்கல் ஒர்க் பிரமாதம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் டாப் க்ளாஸ், என்ன படத்தின் நேரம் தான் கொஞ்சம் சோர்வு. 

க்ளாப்ஸ்

கதைக்களம்

நடிகர்கள் பங்களிப்பு

இடைவேளை, கிளைமேக்ஸ்

டெக்னிக்கல் ஒர்க்

வசனங்கள்

பல்ப்ஸ்

படத்தின் நீளம் பல இடங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் இந்த துரந்தர் 2 அறுசுவை விருந்து இல்லை என்றாலும், கண்டிப்பாக ஒரு சுவையான விருந்து தான். 

துரந்தர் 2 திரை விமர்சனம் | Dhurandhar The Revenge Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US