துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது! ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
அதனை தொடர்ந்து துரந்தர் 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. துரந்தர் 2: The Revenge மார்ச் 19ம் தேதி வெளிவந்து மிகப்பெரிய வசூலை குவித்தது.
இதுவரை துரந்தர் 2 படம் ரூ.1830 கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கிறது.

ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில் துரந்தர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியாகி இருக்கிறது. வரும் மே 14ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் Dhurandhar The Revenge படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறதாம்.
ஆனால் இந்தியாவில் ஹாட்ஸ்டார் தளத்தில் அதே நாளில் படம் வெளிவரும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu