ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த துரந்தர் 2 படத்தின் டீசர்.. இதோ
துரந்தர்
கடந்த ஆண்டு வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூலையும் அடித்து நொறுக்கி, 2025ல் நம்பர் 1 வசூல் செய்த படம் என்கிற சாதனையை ’துரந்தர்’ படைத்தது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் நடிகை சாரா அர்ஜுன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
துரந்தர் தி ரிவெஞ்
’துரந்தர் பார்ட் 1’ படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக மார்ச் 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் ’துரந்தர் தி ரிவெஞ்’ படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் துரந்தர் பார்ட் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் வந்த அதே டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ பாருங்க:
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri