இப்படியொரு கிரிமினல் வழக்கில் சிக்கியவர் தான் அக்ஷாரா ரெட்டியா?- பெயர், வயது எல்லாம் மாற்றிவிட்டாரா, ஷாக்கிங் தகவல்
பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு பரீட்சயப்படாத சிலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் அக்ஷாரா ரெட்டி, இவர் பார்க்க நடிகை அமலா போல் இருக்கிறார் என்பது சிலரின் கருத்து.
அக்ஷாராவை தொலைக்காட்சியில் பார்த்த சிலர் டுவிட்டரில் அவரை பற்றி சில விஷயங்களை கூறி வருகிறார்கள்.
அதாவது அவரது நிஜ பெயர் ஷ்ரவ்யா சுதாகர் என்றும் அவர் 2013ம் ஆண்டு கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் சிக்கியவர். அந்த பிரச்சனைக்கு பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அவர் தனது பெயரை அக்ஷாரா ரெட்டி என்றும் மாற்றியிருக்கிறாராம்.
அக்ஷாரா விஜய் தொலைக்காட்சிக்கு புதியவர் இல்லை என்றும் 2018ம் ஆண்டு ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் பங்குபெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
அக்ஷாரா பற்றி வரும் இந்த கடத்தல் வழக்கு உண்மையா, அப்படிபட்டவரையா நிகழ்ச்சியில் சேர்த்துள்ளார்கள் என்பது எல்லாம் மக்களின் பேச்சாக இருக்கிறது.