ராம் சரண் குழந்தைக்கு தங்க தொட்டில் கொடுத்ததா அம்பானி குடும்பம்? உண்மை இதுதான்
ராம் சரண்
நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபஸ்னா இருவரும் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து தற்போது முதல் குழந்தையை பெற்று இருக்கின்றனர். கர்ப்பமாக இருந்த உபஸ்னா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தைக்கு தற்போது கிளின் காரா கோனிடெல்லா (Klin Kaara Konidela) என பெயர் சூட்டி இருக்கின்றனர். அது பற்றிய அறிவிப்பை தற்போது ராம் சரண் குடும்பம் வெளியிட்டு இருக்கிறது. மேலும் குழந்தை தொட்டிலில் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

தங்க தொட்டில்
மேலும் ராம் சரண் மகளுக்கு அம்பானி குடும்பம் தங்க தொட்டில் பரிசாக கொடுத்ததாக ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
ஆனால் விசாரித்ததில் அந்த செய்தி உண்மை இல்லை என்றும், யாரோ வதந்தி பரப்பி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது.
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri