பிகில் படத்தால் பெரும் கஷ்டத்தை சந்தித்தாரா லவ் டுடே தயாரிப்பாளார், அவரே கூறியுள்ளார்
ஏ.ஜி.எஸ்
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.ஜி.எஸ். இந்த நிறுவனத்தை தற்போது வழிநடத்தி வருபவர் அர்ச்சனா கல்பாத்தி.
இவர் தயாரித்து கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி 'பெரும் தோல்விக்கு பின் லவ் டுடே எனும் வெற்றி கிடைத்துள்ளது' என கூறியுள்ளார்.
லவ் டுடே படத்திற்கு முன் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வெளிவந்த திரைப்படம் விஜய்யின் பிகில். இப்படம் வெளிவந்த நேரத்தில் வசூல் நன்றாக இருந்தாலும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.
பிகில் படம் தோல்வியா
ஆனால், இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் கூறவில்லை. ஆனால், தற்போது பெரும் தோல்வி பின் இப்படியொரு வெற்றி கிடைத்துள்ளது என அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளது பிகில் படத்தை குறிப்பிட்டு தானா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பிகில் லவ் டுடே படத்திற்கு இடையே நாய் சேகர் எனும் படமும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை இவர்களுக்கு தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
90களில் ரஜினி, கமலுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை பானுபிரியாவின் மகள், முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
