பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க 30 லட்சம் செலவு செய்தாரா திவ்யா கணேஷ்? அவரே சொன்ன பதில்
சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 9ம் சீசனில் நடிகை திவ்யா கணேஷ் டைட்டில் ஜெயித்து இருந்தார். சபரிக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது.
திவ்யா கணேஷ் விஜய் டிவியில் இதற்கு முன் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து இருக்கிறார். தற்போது பிக் பாஸ் ஷோவில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வைத்து டைட்டில் ஜெயித்து 50 லட்சம் ருபாய் மற்றும் ஒரு கார் பரிசாக ஜெயித்திருக்கிறார்.

ரூ.30 லட்சம் PR?
திவ்யா கணேஷுக்கு இணையத்தில் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதற்கு காரணம் அவரது PR தான் எனவும், அதற்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.
அது பற்றி சமீபத்தில் திவ்யா கணேஷ் அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
PR வைத்து இருந்தாலும் அவர்கள் என்ன மக்கள் எல்லோரது போனை பிடிங்கி எனக்கு ஓட்டு போட்டுவிட்டார்களா? நான் ரூ.30 லட்சம் - 40 லட்சம் PR க்கு செலவு செய்ததாக சொல்கிறார்கள். 50 லட்சம் தான் என் வாழ்க்கையில் சம்பாதித்த மிகப்பெரிய தொகை. இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன், கார் இஎம்ஐ காட்டிக்கொண்டிருக்கிறேன்.
"பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் முன் எனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. சும்மா தான் வீட்டில் இருந்தேன்" என திவ்யா கணேஷ் கூறி இருக்கிறார். தன்னிடம் அந்த அளவுக்கு பணமே இல்லை என கூறி தன்னை பற்றி பரவும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
