பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா! உண்மை இதுதான்
பாக்கியலட்சுமி கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தார். இனி இவர் தான் இந்த சீரியலின் கதாநாயகனாக வருவார் என்றும் கோபி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இனி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காது என்றும் அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில், இனி பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காதா, இனி அவர் சீரியலில் இருப்பாரா மாட்டாரா என்பது குறித்து அதே சீரியலில் கோபியின் தந்தையாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரோசரி பேசியுள்ளார்.
இனி கோபி இல்லையா
அவர் கூறியதில் 'அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. கோபிக்கான காட்சிகள் வந்துகொண்டே தான் இருக்கும். அவர் ஒரு சிறந்த நடிகர். ரஞ்சித்தின் காட்சிகள் ஒரு ட்ராக் என்றால் கோபியின் காட்சிகள் ஒரு ட்ராக் கண்டிப்பாக வரும்'.
'பாக்கியலட்சுமி சீரியலில் அனைவருக்கும் சமமான காட்சிகள் இருக்கும். அதே போல் கோப்பிக்கும் கண்டிப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் 2க்காக இணையும் ரஜினி, கமல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
