ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்தாரா மாதவன்? அவரே கொடுத்த விளக்கம்

By Parthiban.A Aug 19, 2022 02:30 PM GMT
Report

ராக்கெட்ரி படத்தை இயக்கி நடித்த மாதவன் அந்த படத்திற்காக தனது வீட்டை இழந்துவிட்டார் என செய்தி பரவிய நிலையில் அதற்க்கு மாதவன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ராக்கெட்ரியை மாதவன் இயக்கி நடித்தார். இந்த படத்திற்காக மாதவன் நீண்ட தாடி வைத்து வயதான தோற்றத்திற்கு மாறியதும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

இந்த படம் கடந்த ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது. 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த ராக்கெட்ரி வெற்றியை மாதவன் சமீபத்தில் கொண்டாடினர்.

ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்தாரா மாதவன்? அவரே கொடுத்த விளக்கம் | Did Madhavan Lose His House For Rocketry

வீட்டை இழந்தேனா

நடிகர் மாதவன் ராக்கெட்ரி தயாரிப்புக்காக வீட்டை இழந்துவிட்டார் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த மாதவன் அந்த செய்தி உண்மை இல்லை என கூறி இருக்கிறார்.

"நான் வீட்டையும் இழக்கவில்லை, எதையும் இழக்கவில்லை. ராக்கெட்ரி படத்தில் பணியாற்றியவர்கள் இந்த வருடம் அதிகம் வருமான வரி செலுத்துவார்கள். நாங்கள் நல்ல லாபம் ஈட்டி இருக்கிறோம். நான் இன்னும் அதே வீட்டில் தான் வசித்துக்கொண்டிருக்கிறேன்" என மாதவன் கூறி இருக்கிறார். 

விமான விபத்தில் இறந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- மறுமணம் செய்தாரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US