பாபநாசம் 2 படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை மீனா - அவரே கூறிய பதில்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா.
பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
இதுதவிர பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய நடிகை மீனாவிடம், ரசிகர் ஒருவர் ‘பாபநாசம் 2வில் நீங்கள் நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், அதை நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu