வரலாற்று உண்மை மறைப்பு? பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம் இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ஆனால் தற்போதே இந்த படத்திற்கு சிக்கல் தொடங்கி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த செல்வம் என்ற நபர் ஒருவர் பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பதாக கூறி தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றார்.
சோழர்கள் நாமம் இடும் பழக்கம் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் நெற்றியில் நாமம் இருந்தது. இதுபோல படத்தில் பல வரலாறு மறைக்கப்பட்டு இருக்கலாம். அதனால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்கள்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
