பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்ததா.. சர்ச்சைக்கு நடிகை பதில்

By Parthiban.A Dec 16, 2023 02:01 AM GMT
Report

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் ட்ரோல்களை சந்தித்தாலும், நல்ல வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் கூறியது. அதன் பின் பூஜா ஹிந்தியில் Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்தார்.

தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அது. அந்த படமும் தோல்வி அடைந்தது. அதனால் பூஜா ஹெக்டேவின் தோல்வி படங்கள் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

இந்நிலையில் பூஜா சமீபத்தில் துபாய்க்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது என்றும் அதனால் அவர் பாதியிலேயே கிளம்பி இந்தியாவுக்கு வந்துவிட்டார் என செய்தி பரவியது.

பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்ததா.. சர்ச்சைக்கு நடிகை பதில் | Did Pooja Hegde Receive Death Threats

கொலை மிரட்டல் வந்ததா?

அதன் பின் பூஜா ஹெக்டேவுக்கு சில நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக நேற்று செய்தி பரவியது. அதை பற்றி ஒரு ட்விட்டர் பிரபலம் போட்ட ட்விட் வைரல் ஆகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது பூஜா ஹெக்டே தரப்பு கொலை மிரட்டல் எதுவும் வரவில்லை, எல்லாமே வதந்தி என விளக்கம் கொடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட வதந்திகள் எங்கிருந்து வருகிறது என பூஜா ஹெக்டே கோபமாக கேட்டிருக்கிறாராம்.  

பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்ததா.. சர்ச்சைக்கு நடிகை பதில் | Did Pooja Hegde Receive Death Threats

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US