வாரிசு ஹீரோயின் 'ராஷ்மிகா' பற்றி வந்த வதந்தி! விழுந்து விழுந்து சிரித்த நடிகை
தற்போது தளபதி விஜய்யின் 66வது படமான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் மேலும் பல டாப் ஹீரோ படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகைகள் என்றால் தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க செலவுக்கு வைப்பார்கள். 5 ஸ்டார் ஹோட்டல், அசிஸ்டென்ட் சம்பளம் என மிக அதிகம் செலவு நடிகையின் சம்பளத்தை தாண்டி வரும். இது சினிமா துறையில் வழக்கமாக வரும் புகார் தான்.
இந்நிலையில் ராஷ்மிகா பற்றி ஒரு செய்தி தெலுங்கு மீடியாக்களில் பரவி வருகிறது. அதில் ராஷ்மிகா விமானத்தில் பிஸ்னஸ் க்ளாசில் பயணிப்பது மட்டுமின்றி தனது நாயையும் உடன் கூட்டி செல்வேன் என கூறி தயாரிப்பாளருக்கு தண்ட செலவு வைக்கிறார், கேட்டால் நாய் தன்னை விட்டு தனியாக இருக்காது என சொல்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது.

ராஷ்மிகா விளக்கம்
அது பற்றி விளக்கம் அளித்து இருக்கும் ராஷ்மிகா சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு "நானே நாயை கூட்டி செல்ல நினைத்தாலும், அது என்னுடன் பயணம் செய்ய விரும்பாது. அவள் (நாய்) தற்போது ஹைதராபாத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறாள்" என தெரிவித்து இருக்கிறார்.
இந்த செய்தியை பார்த்துவிட்டு தன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
Sorry but this made my day..? couldn’t stop laughing..??
— Rashmika Mandanna (@iamRashmika) June 24, 2022
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu