சோபிதாவை தாக்கி பேசிய சமந்தா? கர்ப்பமாக இருக்கும் நிலையில் அப்படி சொன்னாரா

By Parthiban A Jun 26, 2026 10:50 AM GMT
Report

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அதன் பின் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. தற்போது சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில் வரும் டிசம்பரில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

சோபிதாவை தாக்கி பேசிய சமந்தா? கர்ப்பமாக இருக்கும் நிலையில் அப்படி சொன்னாரா | Did Samantha Criticize Sobhita Dhulipala

சோபிதாவை தாக்கி பேசினாரா?

சமீபத்தில் சமந்தா நடித்த 'எங்கள் தங்கம்' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருக்கிறது. அதன் சக்ஸஸ் சமீபத்தில் நடந்தது.

அதில் பேசிய சமந்தா மறைமுகமாக சோபிதாவை தாக்கி பேசி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

"கெரியர் மற்றும் relationship என்பது நம் கையில் தான் இருக்கிறது. சில நேரங்களில் உறவுகள் நம் கையில் இருக்காது. அது சிக்கலானது. உறவு என்பது சரியாக இருக்க இரண்டு நபர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு பெண்ணாக நான் என்ன புரிந்துகொண்டேன் என்றால், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு நபராக நீங்களே முழுமையடைய வேண்டும்."

"ஒரு கட்டத்தில் சரியான நபரை கண்டுபிடிப்பீர்கள். ஆனால் வேறொரு நபர் தான் உங்களை முழுமையாக்க முடியும் என்றால் அது சரியாக இருக்காது. அது அடுத்த பக்கம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும், அது சரியல்ல" என சமந்தா கூறி இருக்கிறார்.

சோபிதா மற்றும் நாக சைதன்யா திருமண வீடியோவில் பேசும்போது "நாக சைதன்யா என்னை முழுமையாக்குகிறார்" என சோபிதா கூறி இருந்தாராம்.

அதை விமர்சிக்கும் வகையில் தான் சமந்தா தற்போது பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US