லெஜண்ட் பட ஹீரோயின் சம்பளம் இத்தனை கோடியா? உண்மை இதுதான்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் தி லெஜெண்ட் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஹீரோயின் சம்பளம்
இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ஊர்வசி ரவுடேலா. அவர் தமிழில் நடிப்பது இதுதான் முதல் முறை. தி லெஜெண்ட் படத்திற்காக ஊர்வசி 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது.
தென்னிந்தியாவில் டாப் நடிகையாக இருக்கும் நயன்தாராவே ஒரு படத்திற்கு 10 கோடி அளவு தான் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அதைவிட இரண்டு மடங்கு இவர் சம்பளமாக வாங்கி இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மை இதுதான்
இந்நிலையில் தற்போது இந்த செய்தி பற்றி ஊர்வசி ரவுடேலா தரப்பு விளக்கம் தெரிவித்து இருக்கிறது. 20 கோடி சம்பளம் வாங்கியதாக வந்த செய்தி முற்றிலும் உண்மை இல்லாதது என அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் அவர் உண்மையில் வாங்கிய சம்பளம் ஒரு அறிமுக நடிகைக்கு மிகப்பெரிய தொகையை தான் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri