இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. மேடையில் பரபரப்பு
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். அவர் பிரபல இயக்குனர் பேரரசுக்கு மேடையில் பதிலடி கொடுத்ததாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
யானை கதையை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் கள்வன் என்ற படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய பேரரசு சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் பேசி இருக்கிறார்.

பதிலடி
"யானை என்றாலே ராசியானது தான். யானை என்றாலே பிள்ளையார் தான். மற்ற யானை படங்களை போல இந்த படமும் வெற்றி பெற வேண்டும்" என பேரரசு பேசி இருந்தார்.
அதன் பின் பேச வந்த இயக்குனர் வெற்றிமாறன், 'யானையை வெச்சி எடுத்தாலும், டைனோசரை வெச்சி எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நன்றாக இருந்தால் தான் படம் ஓடும்" என் பேசி இருக்கிறார்.

பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri