ரஜினியின் வேட்டையன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்ற தளபதி விஜய்.. வீடியோ இதோ
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்று பிரமாண்டமான முறையில் உலகளவில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா, அபிராமி, ரக்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையுலக சேர்ந்த தனுஷ், அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் போன்ற பிரபலங்கள் திரையரங்கிற்கு சென்றிருந்தனர்.
வேட்டையன் படத்தை பார்த்த விஜய்?
இந்த நிலையில் தற்போது தளபதி நடிகர் விஜய், பிரபல தேவி திரையரங்கில் ரஜினியின் வேட்டையன் படத்தை பார்த்துள்ளாராம்.
வேட்டையன் படத்தை விஜய் முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ள விஜய் திரையரங்கில் இருந்து வெளியேறி தனது காரில் ஏறி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
