வலிமை படத்திற்கு பின்னணி இசை யுவன் சங்கர் ராஜா கிடையாதா..? வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்
அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த டிரைலரும் தொடர்ந்து Youtube-ல் பல சாதனைகளை படைத்து வருகிறது.
வலிமை படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போட்டுள்ளார் என்று அறிவித்திருந்தனர்.
ஆனால், வலிமை படத்திற்காக பாடல்கள் மட்டும் தான் யுவன் இசையமைத்துள்ளாராம். பின்னணி இசையை இசையமைப்பாளர் ஜிப்ரான் போட்டுள்ளதாக தற்போது கிசுகிசுக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், எது உண்மை என்று..