Dies Irae திரைவிமர்சனம்
பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள டியஸ் இரே மலையாள திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போமா.
கதைக்களம்
ரோஹன், கனி இருவரும் காலேஜ் அலுமினியில் சந்திக்கின்றனர்.
அப்போது அவர்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட உறவு கொள்கின்றனர். கனி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ரோஹனிடம் கேட்கிறார்.
ஆனால் ரோஹன் அதற்கு மறுப்பு தெரிவிக்க இருவரும் பிரிக்கின்றனர். பணக்கார இளைஞரான ரோஹன் பார்ட்டி, நண்பர்கள், டேட்டிங் என ஜாலியாக இருக்கிறார்.

அப்போதுதான் கனி தற்கொலை செய்துகொண்டது தெரிய வருகிறது. அவரது வீட்டிற்கு சென்று கனியின் சகோதரருக்கு ஆறுதல் கூறிவிட்டு வருகிறார் ரோஹன்.
அன்றைய தினம் இரவு அவரது வீட்டில் அமானுஷ்ய சம்பவம் நடப்பதை ரோஹன் உணர்கிறார்.
ஆனால் மறுநாள் அவர் ஆவியால் தாக்கப்படுகிறார். கனி தன்னை கொல்லப் பார்க்கிறார் என்று பயந்து மாந்திரீகம் குறித்து ஓரளவு தெரிந்த மதுசூதனனை சந்தித்து நடப்பதை கூறுகிறார்.
அதன் பின்னர் தன்னை தாக்கும் ஆவியிடம் இருந்து ரோஹன் தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
ரோஹன் என்ற ரோலில் பிரணவ் மோகன்லால் சிறப்பாக நடித்துள்ளார். பணக்கார இளைஞருக்கே உரிய தோரணையில் கெத்து காட்டுகிறார்.
அதே சமயம் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரம்மயுகம் எனும் பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த ராகுல் சதா சிவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
முதல் பாதி வரை திகில் மொமெண்ட்ஸை வைத்து டுவிஸ்ட் உடன் முடிக்கிறார்.
இரண்டாம் பாதியிலும் நம்மை பயப்பட வைக்கும் காட்சிகளுடன் நகரும் திரைக்கதை கிளைமாக்சில் நிமிர வைக்கிறது.
எதிர்பாராத ஒரு கேரக்டரின் சேஞ்ச் ஓவர் செம டுவிஸ்ட். அட என்று கூற வைக்கிறது.
டெக்னிக்கல் ஆக படம் ஸ்ட்ராங்காக உள்ளது. கிரிஸ்ட்டோ சேவியரின் பின்னணி இசை மிரட்டல்.
அதேபோல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் திகில் காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. ஹாரர் படங்களைப் பார்த்து பழகியவர்களை ஈர்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
என்றாலும் ஒரு சில குறைகள் உள்ளன. படம் முடியும் தருவாயில் வரும் காட்சி செம எண்டிங்.
மொத்தத்தில் ஹாரர் பட விரும்பிகளுக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் வாட்ச்தான் இந்த டியஸ் இரே. கண்டிப்பாக ரசிக்கலாம்.
கிளாப்ஸ்
ஹாரர் மொமெண்ட்ஸ்
டெக்னிக்கல் விஷயங்கள்
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்
பல்ப்ஸ்
பார்த்து பழகிய திரைக்கதை