100 தியேட்டர் தான், அதுவும் காலாவதி ஆனது.. டீசல் பட இயக்குநர் ஆதங்கம்
இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் Dude, துருவ் விக்ரம் நடித்த பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் திரைக்கு வந்திருக்கிறது.
அதில் Dude படத்திற்கு தான் அதிக எண்ணிக்கையில் காட்சிகள் மற்றும் டிக்கெட்டுகள் முதல் நாளில் இருந்தே அதிகம் விற்கப்பட்டு இருக்கிறது.
அடுத்து பைசன் படத்திற்கு அதில் பாதியை விட குறைவாக தான் புக்மைஷோ தளத்தில் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறது. டீசல் படத்திற்கு மிக சொற்பமான அளவே டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறது.
இயக்குனர் காட்டாமான பதிவு
இது பற்றிய புள்ளி விவரத்துக்கு டீசல் படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
"எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே.. அதில் பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும்" என அவர் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே …..
— Shanmugam Muthusamy (@shan_dir) October 20, 2025
அதில் பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்….. 😇😇😏 https://t.co/pECEnv0aTQ