வாரிசு vs துணிவு
வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் இரண்டு படங்களுக்கும் சம அளவு தியேட்டர் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு 'வாரிசு தான் நம்பர் 1 ஸ்டார், அவருக்கு தான் அதிகம் தியேட்டர் கொடுக்கணும்' என கூறி இருக்கிறார். அது பற்றி உதயநிதியை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கும் உதயநிதி தனது அதிகாரத்தை துணிவுக்கு ஆதரவாக மற்றும் வாரிசு படத்திற்கு எதிராக பயன்படுத்துகிறார் என ஏற்கனவே விமர்சனம் இருந்து வரும் நிலையில் தில் ராஜு பேசியது பரபரப்பை கிளப்பிவிட்டது.

துணிவு ரிலீஸ் செய்யும் தில் ராஜு
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் முக்கிய பகுதிகளில் தில் ராஜு துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
துணிவு படம் தெலுங்கில் Thegimpu என டப் ஆகி இருக்கிறது. அதனை Vizag மற்றும் Nizam பகுதிகளில் தில் ராஜு தான் விநியோகிக்க போகிறாராம்.

என் மகளின் புகைப்படத்தை வைத்து இப்படி செய்து விட்டார்கள்: நடிகை ரோஜா அதிர்ச்சி புகார்