தமன்னா உடன் டான்ஸ் ஆட போறீங்களா.. உஷாரா இருக்க சொன்ன நடிகரின் மகள்
நடிகை தமன்னா தான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் டான்ஸ் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அதனை தொடர்ந்து அவர் காதலர் விஜய் வர்மா உடன் நெருக்கமாக நடித்து இருந்த வெப் சீரிஸும் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது தமன்னா மலையாளத்தில் அறிமுகம் ஆகி இருக்கிறார். திலீப் ஜோடியாக Bandra என்ற படத்தில் தமன்னா நடித்து இருக்கிறார்.

அருகில் டான்ஸ் ஆடாதீங்க..
தமன்னா உடன் ஒரு பாடல் காட்சியில் ஆடியது பற்றி திலீப் தற்போது பேசி இருக்கிறார்.
நான் தமன்னா உடன் ஆட போகிறேன் என்றதும் என் மகள் மீனாட்சி எனக்கு ஒரு விஷயம் கூறினார். தயவு செய்து தமன்னா அருகில் நின்று ஆடாதீங்க, தூரமாக நின்று ஆடிவிட்டு போங்க. அருகில் ஆடி டேமேஜ் பண்ணிக்காதீங்க என மகள் கூறினார்.
அந்த விஷயத்தை கேட்டு தமன்னா சிரித்தார் என்றும் திலீப் கூறி இருக்கிறார்.