சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என டி.இமானுக்கு சொல்ல தகுதியே இல்லை- பிரபலம் காட்டம்

By Yathrika Oct 27, 2023 06:10 AM GMT
Report

டி.இமான்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அதே அளவு இப்போதெல்லாம் சர்ச்சைகளும் அதிகம் இருக்கின்றன. அப்படி அண்மையில் பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி சொன்ன விஷயம்.

இசையமைப்பாளர் டி.இமான் ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார், அது என்னது என்பதை என்னால் வெளியே கூற முடியாது. ஆனால் இனி ஜென்மத்திற்கும் அவரின் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என கூறியிருந்தார்.

புதிய Restaurant திறந்துள்ள பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- அவரே வெளியிட்ட போட்டோ

புதிய Restaurant திறந்துள்ள பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- அவரே வெளியிட்ட போட்டோ

இமான் சிவகார்த்திகேயன் மீது சொன்ன குற்றச்சாட்டிற்கு அவரது முதல் மோனிகா மறுப்பு தெரிவித்தார். சிவகார்த்திகேயன் எனக்கு சப்போர்ட் செய்தார், அதனால் தான் இமான் இப்படி கூறுகிறார். சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவர் என கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என டி.இமானுக்கு சொல்ல தகுதியே இல்லை- பிரபலம் காட்டம் | Dimman Sivakarthikeyan Controversy Celeb Open Talk

பிரபலத்தின் குற்றச்சாட்டு

இமான்-சிவகார்த்திகேயன் பிரச்சனை குறித்து அவர்களுக்கு நெருக்கமான ஒரு நபர் பேட்டி கொடுத்துள்ளார், ஆனால் தன்னை யார் என்று வெளியே கூற வேண்டாம் என அந்த பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார்.

அவர் பேட்டியில், சிவகார்த்திகேயன் நான் சினிமா உலகில் மிகவும் மதிக்கும் ஒரு பிரபலம். துரோகம் செய்தார் என சிவகார்த்திகேயனை கூற டி.இமானுக்கு எந்த தகுதியும் இல்லை.

எது துரோகம், நான் எந்த பெண் பின்னாலும் போனது கிடையாது, எந்த பெண்ணிடமும் உடல் ரீதியாக தொடர்பு வைத்தது இல்லை, என்னை (....) Chat செய்ய சொன்ன பெண்களும் இருக்காங்க என இமானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பெண்கள் அப்படிபட்ட Chatting செய்ய கூப்பிட்டாங்க அப்படி என்றால் உன்னுடைய வீன்கஸ் தெரிஞ்சிருக்கு தானே அர்த்தம். இதுதான் மனைவி மோனிகாவிற்கு டி.இமான் செய்த துரோகம்.

இமானின் அப்பா டேவிட் ஆசிரியர் வேலை செய்தவர், தங்கமான மனுஷன், ஆனால் இவர் அப்படி இல்லை என பரபரப்பான விஷயங்களை கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என டி.இமானுக்கு சொல்ல தகுதியே இல்லை- பிரபலம் காட்டம் | Dimman Sivakarthikeyan Controversy Celeb Open Talk

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US