தனது மனைவி குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள தினேஷ்- பிரதீப்பிடம் என்ன கூறினார் பாருங்க
பிக்பாஸ்
7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க 5 பேர் வெளியேறிவிட்டார்கள், ஆனால் வேறு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
நிகழ்ச்சியும் சூடு பிடிக்க பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ரச்சிதா குறித்து தினேஷ்
கடந்த சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா கலந்துகொள்ள இந்த 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்டரியாக அவரது கணவர் தினேஷ் கலந்துகொண்டிருக்கிறார்.
தினேஷ்-ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள், ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்துள்ளார்கள். ரச்சிதா கலந்துகொண்ட சீசனில் தனது கணவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் தினேஷ் பேசியுள்ளார்.
24 மணி நேர எபிசோடில் தினேஷ்-பிரதீப் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பிரதீப் நீங்க இதற்கு முன்பு உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் பார்த்திருக்கீங்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு தினேஷ் இல்லை நான் கடந்த சீசன் மட்டும் தான் பார்த்தேன். ஏனென்றால் அந்த சீசனில் என்னுடைய மிஸ்ஸஸ் இருந்தாங்க அதனால அவங்களுக்காக பார்த்தேன் என்று தினேஷ் கூறியிருக்கிறார்.