விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த இயக்குநர்
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இரண்டு வருட நீண்ட காத்திருப்புக்குப் பின் விடாமுயற்சி திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது.
இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் ஆவலோடு சென்று பார்த்து வருகிறார்கள். உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேல் வெளியாகி இருந்த இப்படம் தமிழகத்தில் மட்டுமே 900க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி இருந்தது.
அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பதில்
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் நடிக்க காரணம் என்ன என்பது குறித்து இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார். அதில், " பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் படத்தில் நடிக்க விரும்புவதாக அஜித் சார் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து செய்தி அஜித் சாரை மனதளவில் பாதிக்கும். அதனால் பெண்களை மையமாக வைத்து இப்படம் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்" என்று கூறியுள்ளார்.