சிவகார்த்திகேயனின் டான் போன்று டிராகன் படம் உள்ளதா?.. இயக்குநரின் அதிரடி பதில்
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. ஆனால், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
தற்போது, பிரதீப் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த மாதம் 21 - ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் போன்று இருப்பதாக பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
அதிரடி பதில்
இந்நிலையில், இது குறித்து டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் பதிலளித்துள்ளார். அதில், " உங்களை போன்று தான் இரண்டு வருடத்திற்கு முன் நானும் டான் படத்தை பார்த்தேன். '
ஓ மை கடவுளே' படத்திற்காக என்னை மக்கள் பாராட்டினர். அதுமட்டுமின்றி, ரூ. 100 கோடி படத்தை கொடுத்த பிரதீப் இப்படத்தில் நடித்துள்ளார். அவ்வாறு இருக்கும் போது எது உங்களை நான் டான் போன்று ஒரு படத்தை இயக்குவேன் என்று தோன்ற வைத்தது" என்று பதிலளித்துள்ளார்.
![உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/2d86af19-a587-4643-a422-370ddf41309f/25-67ad67ae148a6-sm.webp)
உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா? IBC Tamilnadu
![பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்](https://cdn.ibcstack.com/article/9f7af4bd-8989-4057-b959-5e1fd4469ae7/25-67ade20235fa6-sm.webp)