நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால்.. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதிரடி பேச்சு
கார்த்திக் சுப்புராஜ்
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை நிரூபித்து, பின் பிட்சா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.
முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன்பின் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களை கொடுத்தார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதிரடி பேச்சு
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் படங்கள் குறித்து கார்த்திக் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "திரைப்படங்கள் உங்களை எப்போதும் பாதிக்காது. ஒரு சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போக விடாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள்.
மது குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை தடுப்பது நல்லது. ஆனால், படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்" என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
