நவரசா ஆந்தாலஜி படத்தின் அனுபவத்தை கூறும் இயக்குனர்கள்..

suriya vijay sethupathi navarasa karthick naren
By Kathick Jul 31, 2021 06:30 PM GMT
Report

இயக்குனர் கார்த்திக் நரேனின் அனுபவங்கள் :

சிறந்த குறும்படங்கள் மூலம் விருதுகளை வென்று, திரைத்துறையில் நுழைந்து கவனம் ஈர்த்த, இயக்குநர் கார்த்திக் நரேன், விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் "புராஜக்ட் அக்னி" பகுதியினை இயக்கியுள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

"புராஜக்ட் அக்னி" பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் பகிர்ந்துகொண்டதாவது... "நவரசா' படத்தை பொறுத்தவரை, அதன் அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். சயின்ஸ் பிக்சன் வகையில், ஒரு புதுமையான கனவு முயற்சி தான் இப்படம். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தயாரிக்கும் வேலைகளை ஒழுங்குபடுத்தியவுடன், முதலில் நான் அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரைத் தான் தொடர்பு கொண்டேன்.

இவர்கள் இருவருடனும் ஏற்கனவே நான் பணிபுரிந்துள்ளேன். அரவிந்த சாமி அவர்களை பொறுத்தவரை அவர் படப்பிடிப்பில் காட்சியை தனது நடிப்பின் மூலம் நிறைய மேம்படுத்துவார். கதாப்பாத்திரங்களை சரியாக வெளிப்படுத்தும் பொருட்டு, அரவிந்த் சாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகியோர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். அனைத்து நடிகர்களும் இத்திரைக்கதையில் அழகாக பொருந்தியுள்ளார்கள். இதனால் படம் மிக அற்புதமாக வந்துள்ளது என்றார்.

மனித உணர்வுளின் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாக தமிழின் முதன்மை கலைஞர்கள் உருவாக்கத்தில் "நவரசா" உருவாகியுள்ளது. Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். "நவரசா" Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

-------------------------------------------------------------------------------------------------------

தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம், அனைத்து தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் சர்ஜுன் KM, விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் "துணிந்த பின்" பகுதியினை இயக்கியுள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

"துணிந்த பின்" பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் சர்ஜுன் KM கூறியதாவது :

இப்படத்தின் தயாரிப்பு குழுவும், நடிகர்கள் குழுவும் படப்பிடிப்பிற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இத்தனை எளிதாக "துணிந்த பின்" பகுதியினை படம்பிடித்திருக்க முடியாது.

படத்தின் மொத்த படப்பிடிப்பும், தென்காசி அருகிலுள்ள அச்சன் கோவிலில், மழை தூறும் மலைப்பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு தளமே குழுவினர் அனைருக்கும் மிகப்பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்திருந்தது.

மொத்த படப்பிடிப்பையும் 5 நாட்களில் முடித்து, விட்டுப்போன காட்சிகளை ஒரு நாளில் எடுத்து முடித்து விட்டோம். இப்படம் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US