ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் மோதுமா?.. ஓப்பனாக சொன்ன இயக்குநர் சுதா கொங்கரா
சுதா கொங்கரா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்கரா. இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
மோதுமா?
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சுதா கொங்கரா, 'பராசக்தி' படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், " பராசக்தி படத்தில் இன்னும் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது 'மதராஸி' படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வந்த பின் பராசக்தி படத்தின் ஷூட்டிங் தொடங்கும்.
பராசக்தி படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் என்று நாங்கள் சொல்லவே, அறிவிக்கவே இல்லை. ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
