ஜனநாயகன் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட் .. ரகசியத்தை உடைத்த இயக்குநர்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் விஜய். மக்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படும் இவர் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் இருந்து விலகும் இவர் தற்போது தனது கடைசி படமான தளபதி 69 அதாவது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட் குறித்து முன்னதாக இயக்குநர் ஹெச். வினோத் பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரகசியம்
அதில், " விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் 200 % அவருடைய திரைப்படமாக மட்டுமே இருக்கும். மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஒரு கமர்சியல் படமாக இந்த படம் இருக்கும்.

இப்படம் தொடங்குவதற்கு முன்பு விஜய் என்னிடம் ஒரு டிமாண்ட் வைத்தார். அது என்னவென்றால் 'என் படத்தை அனைத்து வயதினரும் மற்றும் அரசியல் கட்சியினரும் பார்ப்பார்கள்.
அதனால் இப்படத்தில் யாரையும் தாக்கும் வகையில் எடுக்காமல் லைட்டான விஷயங்களை மட்டும் வைத்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri