தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ்
எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் 2001ம் ஆண்டு அஜித்தை வைத்து தீனா என்ற படத்தை கொடுத்து இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
முதல் படமே அவருக்கு பெரிய ஹிட் கொடுக்க அடுத்து அவர் விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய ஹிட், அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் வேறொரு பரிமானத்தில் நடித்திருப்பார்.
பின் அடுத்தடுத்து சூர்யாவை வைத்து கஜினி இயக்கி வெற்றியடைய அப்படியே பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இதே படத்தை இயக்கி கலக்கினார்.
ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என இயக்கி இருந்தார். விரைவில் சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்தது, ஆனால் இதுவரை படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சொத்து மதிப்பு
படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்தி வந்த ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சொத்து மதிப்பு ரூ. 72 கோடி அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..! News Lankasri
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri