அட்லீ - பிரியா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துகள்..
இயக்குநர் அட்லீ
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. தமிழில் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றார். ஷாருக்கானை வைத்து இயக்கி ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான் ராக்கா. இப்படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்படும் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்லீ - பிரியா
இயக்குநர் அட்லீ கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு Meer என அட்லீ பெயர் சூட்டினார்.

இந்த நிலையில், தற்போது அட்லீ - பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இயக்குநர் அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அட்லீ - பிரியா ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.
Feeling blessed 💞💞💞💞💞@priyaatlee pic.twitter.com/tQgPKbQZbi
— atlee (@Atlee_dir) April 20, 2026
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan