தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு...
இயக்குனர் அட்லீ
பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அட்லீ.
சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்த வேகத்தில் முன்னணி நடிகர்களை இயக்கும் அளவிற்கு வளர்ந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து அட்லீ முதன்முறையாக ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படமே பெரிய ஹிட் அடிக்க அடுத்த படமே தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கினார்.
தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கியவர் அடுத்து பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி ரூ. 1000 கோடி வசூல் வேட்டை படத்தை கொடுத்தார்.
இப்போது பிரம்மாண்டத்தின் உச்சமாக தெலுங்கு சினிமா நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குகிறார், அதனை பெரிய பொருட் செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.
சொத்து மதிப்பு
சினிமாவில் சாதிக்கும் அட்லீ கடந்த 2014ம் ஆண்டு ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
ஜவான் படத்திற்கு சுமார் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்ற நிலையில் அல்லு அர்ஜுன் படத்திற்காக ரூ. 50 கோடி பெற இருப்பதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அட்லீ சொத்து மதிப்பு ரூ. 50 கோடி முதல் ரூ. 60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
