தவறான பழக்கத்தால் வாழ்க்கை முடிந்தது.. பாலா போட்டுடைத்த ரகசியம்
பாலா
பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி உள்ளது. முதலில் இப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
அவர் சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நிலையில் பின் படத்தில் இருந்து விலகினார். அதன் பின் அருண் விஜய்யை வைத்து பாலா அந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
வணங்கான் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஜனவரி 10, 2025 அன்று ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் தான் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அதில் சூர்யா மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
ரகசியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பாலா, " நான் ஒரு கட்டத்தில் என்னுடைய தவறான பழக்க வழக்கத்தினால் நிலை தடுமாறி விட்டேன். என் வாழ்க்கை முடிந்துவிட்டது இனிமேல் அவ்வளவுதான் என்கின்ற நிலை வந்தது.
அப்போது வேறு வழியில்லாமல் சினிமாவை தேர்ந்தெடுத்து வந்தேன், நான் வேறு எந்த வேலைக்கும் சரி பட்டு வரமாட்டேன் என்பது தெரிந்து தான் இந்த முடிவை எடுத்தேன்.
அதன் பின், தவறான பழக்கத்தில் இருந்து விலகி தற்போது சினிமாவில் உழைத்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
