விஜய் - பாலா
விருது விழாவில் விஜய் வரும்போது, இயக்குனர் பாலா எழுந்திருக்காமல் இருந்தது இணையத்தில் படுவைரலாக மாறியது. விஜய்க்கும், பாலாவுக்கும் இடையே மோதல் அதனால் தான் விஜய்க்கு அவர் மரியாதை கொடுக்கவில்லை, எழுந்திருக்க வில்லை என்பது போல் பல விஷயங்கள் உலா வந்தது.
இந்த நிலையில், இயக்குனர் பாலாவிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில், இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இயக்குனர் பாலா வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

சச்சின் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- முதன்முறையாக கூறிய கலைப்புலி எஸ். தாணு
அவர் கூறியதாவது:
"இது ஒரு செய்தியாக ஆக்கப்பட்டு இருக்கு. அது என் அறியாமையில் நடந்தது. அப்படியே இருந்தாலும், நான் ஏன் எழுந்திருச்சு நிக்கணும். என்னைவிட எவ்வளவோ வயதில் சின்ன பையன்-ல, நான் ஏன் எழுந்திருச்சு நிக்கணும். அது கவனக்குறைவாக நடந்தது தானே தவிர, ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்தது அல்ல.
இன்னும் சொல்லப்போனால் எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். ஒரு முறை நான், என் மகள், விஜய் மற்றும் அவரது மனைவி பேசிக்கொண்டிருந்த போது, என் மகள் ஓடிபோய் விஜய்யின் மடியில் அமர்ந்துகொண்டாள்.
அப்போது விஜய் தனது கையில் செல்போனை எடுத்து செல்பீ எடுக்கும்போது, என்னைப்பார்த்து, உங்கள் மகளுடன் செல்பீ எடுத்துகொள்ளவா என கேட்டார். இந்த ஒழுக்கம், அப்படி இருக்கும் ஒரு மனிதரை நான் ஏன் வேண்டுமென்றே அவமானப்படுத்த வேண்டும்" என இயக்குனர் பாலா கூறியுள்ளார்.
இதன்மூலம் இதுநாள்வரை பேசப்பட்டு வந்த மிகப்பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
