இயக்குநர் பாரதிராஜாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? திருமண புகைப்படம் இதோ
பாரதிராஜா
தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருப்பவர் இயக்குநர் பாரதிராஜா. 1977ல் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த இவர், காதலை பல கோணங்களில் நமக்கு காட்டினார்.
16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக பாரதிராஜா அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார்.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் இவர் தனது பயணத்தை துவங்கினார். பல திரைப்படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாரதிராஜா, ஆயுத எழுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின், பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த 2025 மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை தந்தது.
திருமண புகைப்படம்
இயக்குநர் பாரதிராஜா கடந்த 1974ம் ஆண்டு சந்திரலீலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், பாரதிராஜாவின் திருமணம் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..


விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
