நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த ஏ.ஆர். முருகதாஸ்.. அதிரடியான காரணம் என்ன தெரியுமா?
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தர்பார்.
அடுத்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்தும் ஒரு படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் விஜய்க்கு சவால் விடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் என மூன்று படங்கள் வெளியானது.
இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில், கத்தி படத்தின் கிளைமேக்ஸில் விஜய் செய்தியாளர்களை நோக்கி பல விஷயங்களைப் பேசியிருப்பார்.
சவால்
அந்த காட்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், கத்தி படத்திற்கு பின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி ஒன்றில் விஜய்க்கு சவால் ஒன்றை விடுத்திருப்பார்.

அதில், "கத்தி படத்தின் க்ளைமேக்ஸில் ஊடகங்களிடம் விஜய் கோபத்துடன் பேசியிருப்பார். அது போன்று நிஜ வாழ்க்கையிலும் அவர் பேச வேண்டும்" என்று சவால் விடுத்துள்ளார்.
விஜய் கட்சியின் மாநாடு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan