ஏய், எனக்கே கோபம் வருது.. வாட்டர்மெலன் திவாகரை விளாசிய இயக்குனர் சேரன்

By Parthiban A Nov 13, 2026 02:56 PM GMT
Report

கஜினி பட சூர்யா போல வாட்டர்மெலன் சாப்பிட்டு ரீல்ஸ் வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானவர் திவாகர். தன்னைத் தானே வாட்டர் மெலன் ஸ்டார் என அவர் அழைத்துக் கொள்கிறார்.

மேலும் அவருடைய ரீல்ஸ் வீடியோக்கள் அதிகம் பார்வைகளை பெறுவதால், தான் பல முன்னணி நடிகர்களை விட சிறப்பாக நடிப்பதாக அவர் கூறிக் கொள்கிறார். அதனால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இயக்குனர் சேரன்

இந்நிலையில் ஜெயா டிவியில் யார் சரி என்கிற நிகழ்ச்சியை இயக்குனர் சேரன் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் திவாகர் கலந்து கொண்ட நிலையில் அவரை சேரன் கடுமையாக தாக்கிப் பேசி இருக்கிறார்.

"எங்கள் பள்ளியில் படிப்போடு சேர்த்து கலையை ஊட்டி வளர்த்தார்கள்" என திவாகர் சொல்ல, கோபமான சேரன் "ஏய்.. சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு" என கோபமாக கூறினார்.

ஏய், எனக்கே கோபம் வருது.. வாட்டர்மெலன் திவாகரை விளாசிய இயக்குனர் சேரன் | Director Cheran Slam Watermelon Diwakar

எனக்கே கோபம் வந்துச்சு..

மேலும் வாட்டர் மெலன் திவாகருக்கு அட்வைஸ் கூறிய சேரன், " நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் உண்மையிலேயே திறமை இருக்குன்னு காமிக்கிறது மட்டும்தான். கிண்டல் பண்றாங்க, காமெடியனா பார்க்கிறாங்க. ரொம்ப ஓவரா பேசுறீங்கனு சொல்றாங்க."

"உங்களுடைய வளர்ச்சிக்கு மீறி உங்க பேச்சு இருக்குன்னு தான் புகார். யார யாரோட ஒப்பிடலாம்.. யாரோட பேசலாம் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல. ஆனா நீங்க எடுத்த உடனே சிவாஜி கணேசனோடு ஒப்பிடுறீங்க. எது எனக்கே கோபம் வந்துச்சு" என சேரன் தெரிவித்து உள்ளார். 

ஏய், எனக்கே கோபம் வருது.. வாட்டர்மெலன் திவாகரை விளாசிய இயக்குனர் சேரன் | Director Cheran Slam Watermelon Diwakar

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US