ஒரேஒரு ஹிட் படம், பல கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்- புகைப்படத்துடன் இதோ
சிபி சக்கரவர்த்தி
தமிழ் சினிமாவில் கடந்த 2022ம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த டான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி.
மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, தனுஷ் படங்களை இயக்கப் போவதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது அவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கப்போவதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கார்
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்தார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டார்.
இந்த நிலையில் அவர் தனக்காக ஒரு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.