சூர்யா 44 அப்டேட் கொடுத்த இயக்குனர்.. ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்
சூர்யா 44
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கங்குவா. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
ஒரு படத்தின் தோல்வி கருதி உடைந்து போகாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் சூர்யா. தற்போது கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் ஒரு பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரிலீஸ்
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் 44 - வது படத்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "சூர்யா ஒரு சிறந்த நடிகர் அவரை போன்ற ஒருவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி தர கூடிய விஷயம்.
சூர்யாவின் 44 படத்தின் புரோமோஷன் பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும்" என கூறியுள்ளார். இதனால் சூர்யாவின் படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri
