விஜய் வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன்.. பிரபல முன்னணி நடிகர் ஓபன் டாக்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்குகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் விஜய் பிறந்தநாள் அன்று வெளிவந்த இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.
விஜய் வைத்து படம் இயக்குவேன்
இந்நிலையில், நடிகர் விஜய்யை வைத்து கண்டிப்பாக வருங்காலத்தில் படம் இயக்குவேன் என்று பிரபல முன்னணி இயக்குனர் ஹரி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் யானை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
