எங்கு போனாலும் சிங்கம் 4 பற்றிய கேள்வி, சூர்யாவுடன் பிரச்சனையா?- பதில் கூறிய இயக்குனர் ஹரி
ஹரி இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.
இவர் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா என்ற மிக பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் திரையில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் ஹரி
சூர்யா திரைப்பயணத்தில் கமர்ஷியல் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திய திரைப்படம் தான் சிங்கம். முதல் பாகம் வெற்றியடைய அடுத்தடுத்து 2,3 பாகங்கள் வெளியாகி ஹிட்டானது.
இந்த நிலையில் இயக்குனர் ஹரி ஒரு பேட்டியில், நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றிய அப்டேட் கேட்கிறார்கள். பெரிய ஹிட் கொடுத்த படம்,எனவே சிங்கம் 4 கதையை பார்த்து எழுத வேணடும்.
சிங்கம் 4 படம் பற்றி தற்போது வரை எந்த ஒரு முடிவையும் நான் எடுக்கவில்லை, அதேபோல் எனக்கும் சூர்யாவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை, எல்லாம் வதந்திகள் தான் என பேசியுள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
