சிங்கம் 4 எப்போது? இயக்குனர் ஹரி கூறிய தகவல்
சூர்யா - ஹரியின் சிங்கம்
2010ஆம் ஆண்டு ஹரி - சூர்யா கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் சிங்கம். இதற்கு முன் இந்த கூட்டணியில் உருவான ஆறு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிங்கம் படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர்.
போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மனதில் இடம்பிடித்தது. வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள், அனல் பறக்கும் வசனங்கள், அழகிய பாடல்கள் என சிங்கம் 1 படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் வெளியாகின. இரண்டாம் பாகம் வரை மக்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை மக்களிடம் பெற தவறியது.
சிங்கம் 4
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிங்கம் 4 படம் குறித்து இயக்குனர் ஹரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு "சிங்கம் 4ஆம் பாகத்தை பற்றி நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அது போதும் என்று தான். இதுவரை வெளிவந்த மூன்று பாகங்களுமே கனெக்டெட் ஸ்டோரி. கதாபாத்திரங்களும் அப்படியே இருக்கும்".
"மீண்டும் கதாபாத்திரங்களை மாற்றி, வேறொரு கதை ஆனால் தலைப்பு மட்டும் சிங்கம் என்று வைத்தால். அது வியாபாரத்திற்காக பண்ணுவது போல் இருக்கும். சினிமாவை நாம் அவ்வளவு ஈஸியா எடுத்துக்க கூடாது, கொஞ்சம் சீரியஸா இருக்கனும். அதனால் தான் வேண்டாம் என்ற முடிவை எடுத்தோம். முதல் பாகம் எடுக்கும்போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தோம். அதற்கான நம்பிக்கையும் இருந்தது. ஏனென்றால் முதல் பாகத்தின் இறுதியில், இரண்டாம் பாகத்திற்கான துவக்கத்தை வைத்திருப்பேன்" என கூறியிருந்தார்.