கடும் காய்ச்சல் காரணமாக இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி ! வெளியான அதிர்ச்சி தகவல்

Hospitalized Director Hari High Fever
By Balakumar Mar 19, 2021 05:03 PM GMT
Report

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக விளங்குபவர். இவர் சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் கடைசியாக இவர் நடிகர் விக்ரமை வைத்து சாமி 2 படத்தை இயக்கி இருந்தார், இப்படத்தின் முதல் பாகமாக சாமி திரைப்படம் நடிகர் விக்ரமின் திரைப்பயணத்தில் மிக பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது.  

ஆனால் சாமி 2 திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி, மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் தற்போது இவர் நடிகர் அருண் விஜய்யை வைத்து அருண் விஜய் 33 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US