முதல் படத்திலேயே இயக்குனர் ஹரியை மிரள வைத்த நயன்தாரா- இப்படியொரு வேலை பார்த்தாரா?
நயன்தாரா
நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து விட்டார்.
ரூ 10 கோடிகள் வரை ஒரு படத்திற்காக அவர் வாங்குவதாக கூறப்படுகிறது. படத்துக்கு படம் சம்பளம் உயர்த்தி வந்த நயன்தாராவிற்கு இப்போது பாலிவுட்டில் சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா சொந்தமாக நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.

ஐயா படம்
நயன்தாரா தமிழில் முதன் முறையாக அறிமுகமான படம் ஐயா, இப்படத்தில் 12வது படிக்கும் மாணவியாக இவர் நடித்திருப்பார்.
இந்த படத்தில் நடிக்கும் போது நயன்தாரா செம கோபமாக இருப்பாராம், என்ன இந்த பொண்ணு இப்பவே இவ்ளோ கோபமாக இருக்கிறார் என இயக்குனர் ஹரிக்கு தோன்றுமாம்.
அதோடு இயக்குனர் ஹரி பேசுகையில், இவர் பெரிய நடிகை ஆவார் என எனக்கு தெரியும், ஆனால் இவ்வளவு பெரிய இடைத்தை அடைவார் என்று நான் நினைக்கவில்லை.
முதல் படத்திலேயே காஸ்டியூம் விஷயத்துல் என்னிடம் கோபமாக முறையிடுவார், ஆனால், இந்த கோபம் எல்லாம் வேலை நன்றாக நடக்க வேண்டும் என்பதாலேயே இன்று இவர் உச்சத்தில் உள்ளார் என பேசியுள்ளார்.

விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu