வெற்றிப்படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் மகள்களின் அழகிய புகைப்படம்- இந்த தொழில்கள் செய்கிறார்களா?
கே.எஸ்.ரவிக்குமார்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி முக்கிய இயக்குனராக வலம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவருடைய படங்கள் பலவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளது. விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் புரியாத புதிர் தான்.
அதன்பின் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது படங்கள் அவ்வளவாக இயக்குவதில்லை, கடைசியாக விஜய் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டார்.
குடும்பம்
கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என இரு மகள்கள் உள்ளனர்.
மோனிஷா டாக்டர், சென்னையில் புதியதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்துள்ளார், இவரது கணவர் அரவிந்த் அவர்களும் ஒரு டாக்டர் தான்.
கே.எஸ்.ரவிக்குமாரின் இன்னொரு மகள் அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறார்.