கோலாகலமாக நடந்த மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் மகளின் திருமணம்- வெளிவந்த போட்டோ
இயக்குனர் கே.வி.ஆனந்த்
மலையாளத்தில் 1994ம் ஆண்டு வெளியான தென்மாவின் கொம்பத்து என்கிற படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த்.
முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த இவர் ப்ருத்விராஜ் நடித்த கனா கண்டேன் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
பின் அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் என வரிசையாக முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கினார். 2021ம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.
இவருக்கு சினேகா மற்றும் சாதனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மகளின் திருமணம்
கே.வி.ஆனந்த் மகள் சாதனாவிற்கு விஷ்ணு ராஜ் என்பவருடன் இன்று திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஆர்கிடெக்ட் படித்தவர்களாம். இன்று மாலை இத்தம்பதியினரின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?