அஞ்சான் படம் நான் செய்த தவறு தான், ரொம்பவே கஷ்டம்... முதன்முறையாக ஓபனாக பேசிய லிங்குசாமி
அஞ்சான்
தமிழ் சினிமா கொண்டாடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் லிங்குசாமி.
குடும்பங்கள் கொண்டாடும் ஆனந்தம் என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அடுத்து ரன், சண்டக்கோழி என கமர்ஷியல் படங்களை இயக்கினார்.
அப்படங்களை தொடர்ந்து லிங்குசாமி சூர்யாவை வைத்து அஞ்சான் என்ற படத்தை இயக்கினார், பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படம் வெளியானது. சூர்யா-சமந்தா இணைந்து நடித்த இப்படம் மாஸ் வெற்றிப்பெறும் என்று பார்த்தால் தோல்வியில் முடிந்தது.

இப்பட புரொமோஷனில், கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கேன் என ஒரு வார்த்தை கூற அதை வைத்தே மிகவும் கிண்டலுக்கு ஆளானார்.
ரீ-ரிலீஸ்
இந்த நிலையில் அஞ்சான் படம் நாளை நவம்பர் 28, ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கெனவே ரிலீஸானபோது 2 மணிநேரம் 36 நிமிடங்கள் இருந்த படத்தை ரீ-ரிலீஸில் 2 மணி நேரமாக குறைத்து ரிலீஸ் செய்கிறார்கள்.
இப்படம் குறித்து அண்மையில் லிங்குசாமி பேசுகையில், அஞ்சான் படம் 11 வருஷத்திற்கு முன்னாடி ரொம்ப ட்ரோல் செய்யப்பட்ட படம். எனக்கு இப்போது பயமே இல்லை.

ஏனெனில் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் எடிட் செய்ய எனக்குச் சரியான நேரம் கிடைக்கவில்லை, ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்கள். 100% ஒத்துக்கிறேன், நான் தப்பு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.